Tamizhum Saraswathiyum Today Episode | 09.06.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 09.06.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வழியில் உமாபதியை பார்த்து கோவத்தை வெளிப்படுத்தினார். தன்னை பற்றி எப்படி இப்படி ஒரு விஷயத்தை பரப்பலாம் என்று கேட்டார். அர்ஜுன் மற்றும் கார்த்திக் செய்த தவறை எனக்கே தெரியாமல் நடந்த விஷயம். அதை வைத்து எப்படி என் நேர்மையை குறை சொல்லி ஓட்டு வங்கலாம் என்று கேட்டார். மேலும் இதை தமிழ் மற்றும் சரஸ்வதி சொல்லி கொடுத்து தான் இப்படி ஒரு பிரச்சாரம் செய்கிறார் என்று கூறினார். ஆனால் உமாபதி எனக்கு சொந்தமாக மூளை இருக்கிறது, எனக்கு யாரும் சொல்லித்தர வேண்டாம் என்று கூறினார். பின் இதை ஒரு சவால் போல் கோதை எடுத்து இது என் நேர்மைக்கு வைக்கும் பரிட்சை என்று நினைத்து பேசினார். இதை பார்த்து தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இனி கோதை பற்றி பேசி ஓட்டு வாங்காமல் நாம் பதவிக்கு வந்தால் என்ன செய்யலாம் என்று மற்றும் பேசலாம் என்று யோசனை கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….