Tamizhum Saraswathiyum Today Episode | 09.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.08.2022

tamizhum Saraswathiyum. 09.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தனக்கு இன்று முதல் இரவு நடக்க போவதை நினைத்து சரஸ்வதி தன்னிலை மறந்து வீட்டில் இருந்தார். தானாகவே சிரிப்பது,வேலைகளை தவறாக செய்வது என்று ஒரு நிலையில் அவர் இல்லை. பின் சற்று நேரத்தில் தமிழ் அவரை அழைத்து இன்று வெளியே செல்லலாம் என்று கிளம்ப சொன்னார். அதன்படி சரஸ்வதியும் அதற்கு தயார் ஆனார். அதே நேரம் கீதாவின் வீட்டுக்கு அவரது மகள் ஒரு பையனை அழைத்து வந்தார். அவரே தான் தான் காதலிப்பதாக கூறினார். அவர் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் என்றும், லண்டனில் படித்தவர் என்றும் கூறினார். மேலும் தன் அம்மா அப்பாவை அந்த பையனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின் இன்று சாப்பிட வெளியே சென்று, பின் படத்துக்கும் செல்லபோவதாக கூறி கிளம்பினார். தமிழும் சரஸ்வதியும் ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அதே ஹோட்டலுக்கு மது அவரது காத்ளரை அழைத்து வந்து இருந்தார். சரஸ்வதி கை கழுவ போன நேரம் இவர்கள் ஹோட்டலுக்குள் வந்தார்கள். மேலும் தமிழை பார்த்து, மது அவரது காதலர் இடம் மட்டமாக பேசினார். பிஸினஸ் வெற்றிகரமாக நடப்பது ஒரு அதிர்ஷ்டம் தான். இவருக்கு ஆங்கிலம் கூட தெரியாது என்று மட்டமாக பேசினார். உடனே அந்த நபரும் இவர் தான் அந்த கோமாளியா என்று கேட்டார். இந்த நேரத்தில் சரஸ்வதி அவர்கள் பேசுவதை கேட்டுவிட்டார். உடனே அவர்களை பார்த்து வேகமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அவர் போட்ட பிச்சையில் தான் நீ படித்தாய், என்று தமிழ் செய்த விஷயங்களை எடுத்து கூறினார். மேலும் அவரை பார்த்து கோமாளி ந்று சொல்ல உனக்கு கூச்சமாக இல்லையா என்று கேட்டார். ஆங்கிலம் என்பது வெறும் மொழிதான் என்றும், அது தெரியாதவர்கள் முட்டாள் என்றும் அர்த்தம் இல்லை என்று கூறி தமிழை அழைத்துக்கொண்டு கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author