Tamizhum Saraswathiyum Today Episode | 09.11.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மீண்டும் கோதை இடம் ராகினி திருமணத்தை பற்றி பேச வந்தார். ஆனால் கோதை அதை பற்றி கண்டுகொள்ளவில்லை. ராகினி அர்ஜுனை ஒரு ஈர்ப்பு காரணமாக தான் பார்த்து பழகி இருப்பாள். அது காதல் என்று கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். மேலும் நான் சந்திரகலாவுக்கு என் தொழிலாளர்கள் முன் நன்றி கடன் செய்வேன் என்றும், சத்தியம் செய்து இந்த திருமணம் நடக்கும் என்றும் கூறி இருக்கிறேன். அதனால் இந்த திருமணம் நடந்தே தீரும் என்று பிடிவாதமாக கூறினார். இதை கேட்டதும் வேறு வழி இல்லாமல் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நடப்பது நடக்கட்டும் என்று கிளம்பினார்கள். அர்ஜுன் ராகினி இல்லை என்றதும் விஷம் குடித்து தன் உயிரை விட முடிவு செய்தார். விஷத்தை குடித்து நுரை தள்ளி மயக்க நிலையில் இருந்த அர்ஜுனை பார்த்து அவரது நண்பர் மருத்துவமனைக்கு கிளம்பினார். அந்த நேரம் ராகினி அழைத்து நடப்பதை தெரிந்து கொண்டார். அர்ஜுன் விஷம் குடித்தது தெரிந்ததும் அவரால் வீட்டில் இருக்க முடியவில்லை. கிளம்பி அர்ஜுனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சற்று நேரத்தில் ராகினியை வீட்டில் காணவில்லை என்று தெரிந்ததும் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் பதரினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author