Tamizhum Saraswathiyum Today Episode | 09.12.2021 | Vijaytv
tamizhumsaraswathiyum.9.12.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தமிழின் திருமணம் விஷயமாக பேச கீதாவை வீட்டுக்கு வர வைத்தார். கீதா வந்ததும், தனக்கு இந்த சரஸ்வதி வீட்டின் மேல் சந்தேகம் இருப்பதாக கூறினார். M.B.A படித்த பெண் எதற்காக படிக்காத பையனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டார்? எப்படி இது நடந்தது? என்று குழம்பினார் சந்திரகலா. பின் கீதாவை சரஸ்வதி வீட்டை பற்றியும், சரஸ்வதியை பற்றியும் விசாரிக்குமாறு கூறினார். கீதாவும் சரஸ்வதி வீட்டின் அருகே உள்ள வீடுகளில் விசாரித்தார். முதலில் மின்னல் வீட்டில் சரஸ்வதியின் குணம், குடும்பம் என அனைத்தயும் விசாரித்தார். மின்னல் தன் அம்மாவிடம், படிப்பு விஷயத்தை பற்றி சொல்ல வேண்டாம் என்று கண் காட்டினார். அதையும் புரிந்து கொண்டு அவரும் M.B.A படித்து இருப்பதாக கூறினார். பின் அந்த தெருவில் பார்ப்பவர் அனைவரிடமும் விசாரித்தார். அனைவருமே சரஸ்வதி தங்கமான பெண் என்றே கூறினார்கள்.மின்னல் தன் வீட்டில் நடந்த விஷயங்களை சரஸ்வதியிடம் கூறினார். சரஸ்வதி பதட்டம் அடைந்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…