தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மயக்கம் அடைந்ததால் குடும்பமே பதட்டத்தில் இருந்தார்கள். டாக்டர் அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறினார். இதை கேட்ட நடேசன் பதறினார். தமிழ் மற்றும் சரஸ்வதியின் மேல் கோபம்கொண்டார். சரஸ்வதி அழுவதை பார்த்து இனியும் நடித்து ஏமாத்த வேண்டாம். உன் நாடகம் எல்லாம் முடிந்து விட்டது என்று கத்தினார். நடேசன் கத்துவது அங்கு உள்ள நோயாளிகளை பாதிக்கும் என்று நடேசனை சத்தம் போட வேண்டாம் என்று எச்சரித்தார் டாக்டர். இதனால் தமிழ் சரஸ்வதியை அந்த இடத்தில் தன் கண் முன்னால் நிற்க வேண்டாம் என்று கூறினார். பின் தமிழ் சரஸ்வதி இருவரும் மருத்துவமனை வெளியில் இருந்த கோவிலில் பிரார்த்தனை செய்தார்கள். கோதைக்கு எந்த கெடுதலும் நடக்க கூடாது என்று வேண்டினார்கள். மண்டபத்தில் செய்ய வேண்டிய கணக்கு வழக்குகளை தானே பார்த்துக்கொண்டார் சந்திரகலா. நடேசனுக்கு ஆறுதல் சொல்வது, கார்த்திக்கை சமாதானம் செய்வது என்று நல்லவர் போல் நடித்தார் சந்திரகலா. பின் அந்த ஊரில் இருக்கும் இருதய சிகிச்சை நிபுணர் ஒருவரை அழைத்து உடனே கோதையை பார்க்கும்படி செய்தார். இதை அனைத்தையும் பார்த்து கார்த்திக் மனம் மாறினார். இவரை போல் தவறாக எண்ணிவிட்டோமே என்று மனதில் நினைத்துக்கொண்டார். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று டாக்டர் கூறினார். சொக்கலிங்கம் தன் மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயதில் இருந்தார். பாட்டி பதட்டத்தில் மயக்கம் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..