Tamizhum Saraswathiyum Today Episode | 10.03.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 10.02.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் ஆசையை தமிழுக்கு அழைத்து சொன்னார். எந்த படிப்பால் வீட்டில் இவளோ பெரிய பிரச்சனை வந்ததோ, அதே படிப்பை படித்து காட்டுவேன் என்றார். ஆனால் தமிழ் அதெல்லாம் எதுவும் வேண்டாம். முதலில் மாமா மனதை மாற்ற வேண்டும், அம்மாவுக்கு நல்ல மருமகளாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதி மிகவும் வருந்தினார். தமிழ் கூட என்னை புரிந்துகொள்ளவில்லையே என்று யோசித்தார். ஆனால் இரவு வீடு திரும்பிய தமிழ், சரஸ்வதிக்கு ஒரு பரிசு கொண்டு வந்தார். அதை பிரித்து பார்த்தார் சரஸ்வதி. உள்ளே சரஸ்வதியின் படிப்புக்கு தேவையான புத்தகங்கள் இருந்தது. பின் தமிழ் நீ படித்து ஜெய்ப்பாய் என்று ஊக்குவித்தார். பின் ஆற்காடு பாய் விஷயமாக அம்மாவிடம் பேச வேண்டும் என்று கிளம்பினார். கீழே சென்று கோதையிடம் பேசினார். ஆற்காடு பாய்க்கு லோடு போக வேண்டும், ஆனால் கார்த்திக் அதை நிறுத்தி வைத்து உள்ளார் என்று கூறினார். அவரிடம் 20 லட்சம் பணம் வாங்கியது நான்தான், ஆனால் அது சரஸ்வதி வீட்டில் பெரிய பிரச்சனை ஆகியது, அதனால் தான் வாங்கினேன் என்றார். நான் பாய்க்கு வாக்கு கொடுத்துவிட்டேன் என்றார். ஆனால் கார்த்திக் தனக்கு அவருடன் சேர்ந்து வியாபாரம் செய்வதில் விருப்பம் இல்லை என்றார். அவர் பணத்தை தாமதமாகவே தருவதால் தான் இந்த அமுடிவை எடுத்தேன் என்றார். கோதை அனைத்தையும் கேட்டுவிட்டு கம்பேனியில் எந்த முடிவும் கார்த்திக் மிடும் தன எடுக்க முடியும் என்றார். கார்த்திக் சொல்வது தான் சரி. ஆனால் இனி கார்த்திக் தமிழ் இருவருக்கும் இனி மாதம் 1 லட்சம் சம்பளம் வந்து செரும் என்றார். இதை கேட்ட தமிழ் சொந்த கம்பேனியில் வேலை செய்ய சம்பளமா என்று வருந்தினார். ஆனால் கார்த்திக் அதற்கு ஓத்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…