தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திட்டம் படி வீட்டில் அனைவரும் விஷேஷத்துக்கு தயார் ஆனார்கள். சந்திரகலா அங்கு நடப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தார். ஆனால் ஆதி ஒரு திட்டமாக வெளியில் சென்று இருக்கிறான் என்று தைரியமாக கீதாவிடம் கூறினார். சரஸ்வதிக்கு தாய் வீட்டு சீதனம் கொடுப்பதற்கு சொக்கலிங்கம், வாசுகி பாட்டி மற்றும் குடும்பத்தில் அனைவரும் கோதை வீட்டு வாசலில் நின்றார்கள். ஏற்கனவே கிடைத்த அவமானங்களை நினைத்து பார்த்தார் சொக்கலிங்கம். பின் நடேசன் கோதையை அழைத்து வந்தார். கோதை சொக்கலிங்கம் குடும்பம் வாசலில் நிற்பதை பார்த்து கோபம் கொண்டார். எதற்காக இவர்கள் இங்கே வந்தார்கள் என்று கோபமாக பேசினார். தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்து உள்ளர்கள் என்று கூறினார். ஆனால் கோதை சீரை மட்டும் வைத்து விட்டு செல்லலாம், ஆனால் அந்த குடும்பத்தில் இருந்து யாருமே வீட்டுக்குள் வர கூடாது என்று கூறினார். இதனால் அதிர்ச்சியில் குடும்பமே நின்றது. நான் தாய் வீட்டு சீர் கொண்டு வரட்டும் என்று மட்டுமே கூறினேன், யாரையும் நான் அழைக்கவில்லை என்றார். இதனால் அவமானப்பட்ட சொக்கலிங்கம் மற்றும் குடும்பம் அங்கு இருந்து கிளம்பியது. தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நடந்ததை நினைத்து வருந்தினார்கள். அடுத்து தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு ஆரம்பம் ஆனது. சந்திரகலா ஆதி வருகைக்காக காத்திருந்தார். மேலும் ஆதி நமச்சி நடிக்க வைத்த நபரை அழைத்து பேசினார். காசு கொடுத்து அவரை கோதை வீட்டுக்கு அழைத்து வந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…