Tamizhum Saraswathiyum Today Episode | 10.06.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் கார்த்தி இருவரும் காண்ட்ராக்ட் பற்றி தெரிந்துகொள்ள வேலை கொடுக்கும் கம்பேனிக்கு வந்தார்கள். வந்த இடத்தில் கார்த்திக் எதாவது யோசிக்காமல் பேசிவிடுவார் என்று தமிழின் நண்பர் தமிழை மட்டும் அழைத்துச் சென்றார். தமிழ் கார்த்திக்கையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால் தமிழ் மட்டும் உள்ளே சென்றார். கார்த்திக்கை வெளியே அமர வைத்தார்கள். இதை கார்த்திக்கால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னை அழைத்து வந்து அசிங்க படுத்தி விட்டார்கள் என்று இருந்தார். மேலும் அது நடந்ததுக்கும் தமிழ் தான் காரணம் என்று நினைத்தார். தமிழ் மட்டும் உள்ளே சென்று பேசிவிட்டு வெளியே வந்தார். கார்த்திக் இடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதை கேட்கும் நிலையில் இல்லை. பின் இருவரும் கோதை இண்டஸ்டரிஸ்க்கு வந்து சேர்ந்தார்கள். இங்கு கை எழுத்து போட எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…