தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டுக்கு கார்த்திக் வந்ததை உடனே வசுவுக்கு அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்தார். உடனே வசுவிடம் கார்த்திக் இங்கு வந்தது, அவருக்கு பிடித்த உணவை சமைத்து கொடுத்தது, அவர் அதை சாப்பிட்டது என்று அனைத்தையும் கூறினார். அதை கேட்டதும் வசு சந்தோசத்தில் துள்ளி குதித்தார். மேலும் அவர் தன்மையாக பேசியது, சாப்பிட்டது, கோதை அம்மாவே அனுப்பி பத்திரிக்கை வைத்தது என்று அனைத்தையும் சொல்லி சரஸ்வதி மகிழ்ச்சியில் இருந்தார். உடனே வசுந்தரா இந்த விஷயத்தை வீட்டில் கூறினார். கார்த்திக் சாப்பாடு வேண்டாம், தனக்கு பசிக்கவே இல்லை என்று கூறினார். ஆனால் அதற்கு வசுந்தரா காரணத்தை கூறினார். கார்த்திக் அவருக்கு பிடித்த மஷ்ரூம் பிரியாணியை சாப்பிட்டதை கூறினார். அதை கேட்டதும் ராகினி கோவதின் உச்சத்துக்கு சென்றார். அவன் வீட்டுக்கு சென்று நீ விருந்து சாப்பிட்டு வந்து இருக்கிறாய். அந்த கொலைகாரன் வீட்டுக்கு போனதே தவறு, இதில் அங்கு சாப்பாடு வேறு என்று குதித்தார். ஆனால் கோதை அதற்கு திட்டவும் இல்லை, கோவப்படவும் இல்லை. இந்த வீட்டில் இருந்து கத்துக்கொண்ட நல்ல பழக்கங்களை செய்கிறாள் என்று கூறினார். பின் கோதை மற்றும் நடேசன் இருவரும் கம்பெனி கணக்கு வழக்குகளை பார்த்தார்கள். அதில் ஏகப்பட்ட கேள்விகளை அர்ஜுன் இடம் கேட்டார்கள். இது என்ன பணம், அது என்ன கணக்கு என்று கேள்விகளை அடுக்கினார்கள். அதற்கு அர்ஜுன் பதில் சொன்னாலும், இந்த பழக்கம் புதிதாக இருந்தது. இது வரை காட்டிய இடத்தில் கை எழுத்து போட்ட கோதை, இபோது கேள்வி கேட்கிறார் என்று பயந்தார். இதை கவனித்த ராகினி, என் புருஷனுக்கு மரியாதை இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்று கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….