Tamizhum Saraswathiyum Today Episode | 10.08.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு ஆத்திரத்தில் வீடு திரும்பிய மது அவரது வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைத்தார். அவளுக்கு இவளோ திமிரா? +2 கூட திணறி பாஸ் ஆன இவள் என்னை அசிங்கப்படுத்திவிட்டாள். அவளுக்கு நான் யார் என்று காட்ட வேண்டும். கோதை இண்டஸ்ட்ரீஸ் வீட்டு மருமகள் என்ற திமிரு என்று கத்தினார். வீட்டில் அவரின் அப்பா அம்மா எதற்கு இந்த கோவம் என்று புரியாமல் nindraargl. மேலும் கீதா விசாரிக்க, நடந்ததை கூறினார் மது. அதை கேட்டதும் கீதாவும் சேர்ந்து சரஸ்வதியை பழி வாங்க நினைத்தார். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அவர்களுக்கான வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் கனவு உலகத்தில் மிதந்தார்கள். முதல் இரவுக்கான ஏற்பாடுகள் செய்தார்கள். சரஸ்வதி அறைக்கு வந்ததும், தமிழ் அவரிடம் இந்த நாளை பற்றி பேசினார். இந்த நாளுக்காக தான் இத்தனை மாசமாக காத்திருந்தேன் என்று கூறினார். இனியும் தள்ளி போட வேண்டாம் என்று நினைத்தார். ஆனால் அந்த நேரம் திடீர் என்று சரஸ்வதிக்கு நெஞ்சு எரிச்சல் வந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தார். பின் திடீர் என்று மயங்கியும் விழுந்தார். உடனே பதறிப்போய் ராகினியை அழைத்து பார்க்க வைத்தார். ராகினிதியும் இது சாப்பிட்டது ஒத்துக்கொள்ளமல் இருப்பது போல் இருக்கிறது என்று உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அதற்குள் கோதை மற்றும் நடேசன் இருவரும் இது கண்டிப்பாக நல்ல செய்தி தான் என்று முடிவு எடுத்து சந்தோஷ பட ஆரம்பித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author