தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது குடும்பத்தோடு கோவிலுக்கு போனதில் அங்கு நடந்த சங்கடத்தால் உடனே வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் சரஸ்வதி மற்றும் வசுந்தரா இருவரையும் தனியாக அழைத்து பேசினார். தன்னுடைய பழைய புகைப்பட ஆல்பத்தை எடுத்து தன் மருமகள்களிடம் கொடுத்தார். அவர்களும் ஆர்வமாக பார்த்தார்கள். அதில் கார்த்திக் தமிழ் என்று அனைவரது சிறு வயது புகைப்படங்கள் இருந்தது. அனைத்து பார்த்துவிட்டு கடைசியில் இதே போல் பேரன் பேத்தி புகைப்படங்களை இந்த ஆல்பத்தில் பார்க்க வேண்டும் என்று கூறினார். மறைமுகமாக சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். இப்படி வற்புறுத்தி பெற்றுக்கொள்வது சரி இல்லை தான், ஆனால் நடக்க வேண்டிய சில விஷயங்கள் அந்த அந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்டதும் வசுந்தரா மற்றும் சரஸ்வதி இருவரும் சங்கடத்தில் என்ன சொல்வதென தெரியாமல் இருந்தார்கள். அதே நேரம் நடேசன் அவரது இரண்டு மகங்களிடமும் அவர் பாணியில் தன்னையும் கோதையையும் சீக்கிரமே தாத்தா பாட்டி ஆக்க வேண்டும் என்று கூறினார். பின் சற்று நேரத்தில் சரஸ்வதி வசுந்தராவுக்கு கார்த்திக் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வசுந்தராவுக்கு அறிவுரை கூறினார். தமிழ் மற்றும் என்னால் உங்களுக்குள் இருக்கும் பிரிவு அதிகம் ஆக கூடாது என்றார். அதை தமிழ் இடமும் சொல்ல ஆரம்பித்தார். கார்த்திக் நம் மீது உள்ள கோவத்தில் வசுந்தரா உடன் சேர்ந்து வாழாமல் இருப்பதை தெரிந்து கொண்டார் தமிழ். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…