தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தான் ஏற்பாடு செய்த திட்டம் சோதப்பியதால் எப்படியும் அந்த தமிழ் சரஸ்வதி இருவரும் சேர்ந்து வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருப்பார்கள் என்று நினைத்தார். அதனால் பதட்டமாக இருந்தார். ஆனால் சற்று நேரத்தில் ஆதி மூலமாக சரஸ்வதிக்கு உடல் நலம் குறைந்தது, அதனால் சரஸ்வதியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் கிடைத்தது. இதனால் மீண்டும் தானாகவே அவர்களது முதல் இரவு தள்ளி போனதை நினைத்து சந்தோசம் கொண்டார். மேலும் கீதாவை வர வைத்து இந்த விஷயத்தை கூறினார். பின் மீண்டும் இந்த நிலையில் வேறு ஒரு பிரச்சனையை கிளப்ப சொக்களின்கத்தை எதார்த்தமாக பார்ப்பது போல் பார்த்து பேசினார். அவரிடம் சரஸ்வதிக்கு உடல் நிலை சரியில்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதையை மரைமுகமாக தெரிவித்தார். அதை கேட்டதும் பதறிய சொக்கலிங்கம் உடனே வாசுகியை அழைத்துக்கொண்டு கோதை வீட்டுக்கு கிளம்பினார். அங்கு சென்றால் கோதை வீட்டுக்குள் அழைக்கவும் இல்லை, சரியாக பேசவும் இல்லை. வாசலோடு பேசி அனுப்பி விடலாம் என்று நினைத்து சரஸ்வதிக்கு ஒன்றும் இல்லை, சரஸ்வதிக்கு சிகிச்சை முடிந்து இப்போ திரும்பி வந்து விடுவார்கள் என்று கூறினார். ஆனால் அதோடு நிறுத்தாமல் அவர்களை அசிங்க படுத்தும்விதமாக சரஸ்வதியை பற்றி விசாரித்த வரை கிளம்பும்படி கூறினார் கோதை. அதே நேரம் கீதாவும் அங்கு வந்து எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பேசினார். இதனால் சொக்கலிங்கம் கோவத்தில் பேச ஆரம்பித்தார். தான் செய்த தவறுக்கு பல முறை மன்னிப்பு கேட்டும் மன்னிக்க மனம் இல்லை கோதைக்கு என்றார். மேலும் கீதா செய்த தவறுகளை துரோகத்தை மன்னித்து ஏறுக்கொள்ளல்லாம், சந்திரகலா என்ன தவறு செய்தாலும் மன்னித்து பேசுகவீர்கள், மேலும் உங்கள் இரண்டாவது மகன் கார்த்திக் காதல் திருமணமனத்தை நடத்த சொல்லாத பொய் இல்லை, மேலும் உங்கள் வளர்ப்பான உங்கள் தமிழ் தான் என்னை பொய் சொல்ல வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டார் என்று அவர் மனதில் இருந்த அத்தனை ஆதங்கத்தையும் கொட்டினார். ஆனால் கோதை எந்த பதிலும் சொல்லாமல் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….