தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கோதையை பழிவாங்க நினைத்து கோதைக்கு கொடுத்த காபியில் மயக்க மருந்தை கலந்து கொடுக்க சொன்னார். கலாவும் அதை கச்சிதமாக செய்து முடித்தார். அவர்கள் நினைத்தது போல் கோதைக்கு சற்று தலை சுற்றல் எர்ப்பட்டு மயங்கி விழுந்தார். ஆனால் அவர் அறையில் மயங்கியது வேறு யாருக்கும் தெரியவில்லை. முகூர்த்தம் தவர கூடாது என்று சந்திரகலா தாலி கட்ட சொன்னார். ஆனால் அம்மா இல்லாமல் என்னால் தாலி கட்ட முடியாது என்று கார்த்திக் கூறினார். அனைவரும் பதட்டமாக இருதார்கள். தமிழ் கோதை மயங்கி கிடபப்தை தன் அப்பாவுக்கு அழைத்து கூறினார். அதையும் கண்டுகொள்ளாமல் தாலி கட்ட கார்த்திக்கை அறிவுறுத்தினார் சந்திரகலா. பின் அந்த இடத்துக்கு சரஸ்வதி விரைந்தார். பின் சுடு தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து கொடுத்தார். சற்று நேரத்தில் கோதைக்கு மயக்கம் தெளிந்து மேடைக்கு வந்து சேர்ந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…