Tamizhum Saraswathiyum Today Episode | 12.01.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum 12.01.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் வசுந்தராவின் தாலி பெருக்கும் விசேஷம் நடந்தது முடிந்தது.அதில் சந்திரகலா அங்கு வந்தவர்களுக்கு 15 ஆயிரத்திற்கு பட்டு புடவையும், ஒரு சவரன் தங்க காசும் கொடுத்தார். இதை சற்றும் எதிர் பார்க்காத கோதை, சரஸ்வதி அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்கள். வாசுகி அதை பின் யோசித்து வாங்கிக்கொண்டார். இதனால் வசு அவர் அம்மாவை தனியாக அழைத்து பேசினார். எதற்கு இவளோ செலவு செய்ய வேண்டும்? சரஸ்வதி வீட்டில் சங்கடபடுவார்கள் என்று கூறினார்.அதற்கு சந்திரகலா வாத்தியார் வீட்டில் வசதி இல்லை என்பதால் என் பொண்ணுக்கு நான் எதும் செய்யாமல் இருக்க முடியாது.எனக்கு இருப்பதே நீயும் அருணும் மட்டுமே என்று கூறி கண் கலங்கினார்.பின் எல்லாமே கோதை விரும்பும் படியே நடக்க வேண்டும் என்று உன்னுடைய தனித்தன்மையை விட்டுக்கொடுக்காத என்று அறிவுரை கூறினார்.அதே போல் நாட்ந்ததை நினைத்து கோதை வாசுகி இடம் கண் கலங்கி நின்றார். ஆனால் வாசுகி எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி வீட்டுக்கு கிளம்பினார. ஆனால் சொக்கலிங்கம் தான் நினைத்தது போலவே நடந்தது விட்டது இதற்கு தான் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியதாக கூறினார். வசு கோதையிடம் தன் அம்மா செய்தது தவறா என்று கேட்டார். கோதை தவறு இல்லை சிறிது வருத்தம் மட்டுமே என்று கூறினார். அதற்கு வசு அது எப்படி சரி ஆகும் எனது அம்மா எனக்காக செய்த சீர் வரிசை எப்படி தப்பாகும்? இதே போல் சரஸ்வதிக்கு செய்ய வேண்டும் என்று கூறினால் மட்டுமே அது தவறாகும் என்று தன் மனதில் பட்டதை கேட்டார். அதற்கு கோதை என்ன பதிலளித்தார்? காணொளியை பார்க்க…