தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் அம்மாவை பார்த்து விசேஷத்துக்கு அழைத்தார்கள் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும். பின் சரஸ்வதி இடம் பணப்பிரச்சனை எதுவும் உள்ளதா என்று கேட்டார். மேலும் நகை எல்லாம் கவரிங் போல் உள்ளதே என்று விசாரித்தார். சரஸ்வதியும் இந்த கம்பேனி ஆரம்பிக்க கடன் வாங்கியது, நகையை வித்ததும் நடந்ததை கூறினார். பின் எப்படியும் அவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள் என்று நம்பினார். இரவு வீட்டுக்கு வந்ததும் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நாளைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து முடித்தார்கள். நமச்சியும் அவரால் முடிந்த எல்லா வகையிலும் உதவினார். அடுத்த நாள் எப்படியாவது தமிழ் ஆரம்பிக்கும் கம்பேனியை பார்க்க வேண்டும் என்று நடேசன் மற்றும் வசுந்தரா திட்டம் போட்டார்கள். ஆனால் அர்ஜுன் குடும்பம் அதையும் திட்டம் போட்டு தடுத்து நிறுத்தினார்கள். அடுத்த நாள் அர்ஜுன் மற்றும் கோதை இருவரும் மினிஸ்டரை பார்க்க சென்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…