Tamizhum Saraswathiyum Today Episode | 12.05.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் தங்களுக்கு நடந்த அவமானத்தை நினைத்து பார்த்து வருந்தினார்கள் சொக்கலிங்கத்தின் குடும்பத்தார்கள். ஆனால் சொக்கலிங்கம் தன் மகள் அங்கு நிம்மதியாக வாழ்ந்தால் மட்டும் போதும் என்று நினைத்தார். மேலும் அவளுக்கு அந்த வீட்டில் கிடைக்க வேண்டிய மரியாதையும் கிடைத்துவிட்டது. அதனால் வறுத்தப்பட வேண்டாம் என்று நினைத்தார். ஆனாலும் அவருக்கு பொய் சொல்லி இந்த நாடகம் நடத்தி வீட்டுக்குள் சென்றது நெருடலாக இருந்தது. ஆனால் பாட்டி அதை பெரிது படுத்தாமல் இருக்க சொன்னார். சந்திரகலா தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்து கோவத்தில் கொந்தளித்தார். மேலும் தன் வாயாலே இப்படி உண்மையை சொல்ல வைத்து, வீடியோ எடுத்து தன்னையே அசிங்க படுத்தி விட்டார்கள் என்று எரிச்சலில் இருந்தார். இதற்கு எப்படியும் பழி வாங்கியே ஆவேன் என்றார். அதே நேரம் சரஸ்வதி வீட்டில் அனைவருக்கும் ருசியாக சமைத்து பரிமாறினார். கார்த்திக் அந்த சாப்பாட்டை சாப்பிட தயங்கினார். ஆனால் கோதை சொன்னதால் வேறு வழி இன்றி சாப்பிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author