Tamizhum Saraswathiyum Today Episode | 12.07.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவரது அப்பாவை தனியாக அழைத்து பேசினார். கார்த்திக் மற்றும் வசுந்தரா இடையே பிரச்சனை போகிறது என்று கூறினார். என்ன என்று விசாரிக்கையில் அவர்கள் இருவரும் இன்னும் புருஷன் பொண்டாட்டியாக வாழவே ஆரம்பிக்கவில்லை என்று கூறினார். இதை கேட்ட நடேசன் அதிர்ந்து போனார். எதற்காக இவளோ பெரிய முடிவு? அப்படி என்ன பிரச்சினை அவர்களுக்குள்? என்று கேட்டார். தமிழும் அவர்களுக்குள் சில விஷயங்கள் ஒத்துப்போகவில்லை. வசுந்தராவுக்கு எல்லாரையும் மதித்து ஓத்துமையாக வாழ ஆசை. ஆனால் கார்த்திக் தனக்கு கீழ் தான் மற்றவர்கள் என்று நினைக்கிறான். இதுவே இவர்களுக்குள் பெரிய பிரச்சினை ஆகி விட்டது என்றார். இதை கேட்டதும் நடேசன் என்ன சொல்வதென புரியாமல் நின்றார். மேலும் எதாவது செய்து இந்த பிரச்சனையை சரி செய்து வைக்கிறேன் என்று உறுதி அளித்தார். பின் கோதை இடம் இதை பற்றி சொல்லாமல், வசுந்தராவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். குழந்தை இல்லாமல் இருப்பது எதுவும் உடம்பில் பிரச்சனையா என்று பார்க்கலாம் என்று கூறினார். முதலில் கோதை அதற்கு தயங்கினாலும் பின் அதற்கு ஒத்துக்கொண்டார். அடுத்த நாள் வசுந்தராவை அழைத்து கிளம்ப சொன்னார். வசுந்தராவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கோதை விடுவதாக இல்லை. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று கூறினார். வசுந்தரா அதிற்கு பதில் சொல்ல முடியாமல் அவரது அறையில் புலம்பிக்கொண்டு இருந்தார். அதை பார்த்த கார்த்திக் விசாரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author