Tamizhum Saraswathiyum Today Episode | 12.08.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று , சொக்கு மற்றும் வாசுகி இருவரும் அவமான பட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். வந்ததும் வீட்டில் அனைவரும் எதுவும் விசேஷமா என்று கேட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை வெறும் வயிறு கோளாறு தான் என்றார்கள். ஆனல் அவர்களின் முகம் வாடி இருப்பதால் சொக்குவின் அம்மா விடாமல் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது வாசுகி பொறுக்க முடியாமல் அங்கு நடந்ததை கூறினார். சொக்குவை அந்த கார்த்திக் இவளோ தர குறைவாக நடத்தியதை விட அதை பார்த்தும் பார்க்காமல் இருந்த கோதை மீது தன் கோவம் வந்தது அனைவருக்கும். மின்னலும் அங்கு இருந்ததால் உடனே தமிழுக்கு அழைத்து சரஸ்வதியை நலம் விசாரித்தார். மேலும் சரஸ்வதியின் அம்மா அப்பா இருவரும் அசிங்கப்பட்டு வீட்டுக்கு திரும்பி வந்ததும் தெரியவந்தது. இதை கேட்ட தமிழ் கோவத்தில் கொந்தளித்தார். கார்த்திக்கை பார்த்து கேள்வி கேட்பேன் என்று வீட்டுக்கு கோவமாக வந்தார். வந்த வேகத்தில் கார்த்திக்கை பார்த்து எகபட்ட கேள்விகளை அடுக்கினார். அவருக்கும் நம் அப்பா வயது மரியாதை இல்லாமல் நடந்தது கொள்ளலாமா என்று கேட்டார். ஆனால் அதன் பின் கார்த்திக் தன் அம்மாவை திட்டியதால் தான் அப்படி பேசும்படி ஆகி விட்டது என்று கூறினார். இதனால் தமிழ் தன் அம்மாவையே திட்டி பேசினாரா என்று கோவத்தை சரஸ்வதி மேல் திருப்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…