தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா கர்பமாக இருப்பதை உடனே சந்திரகலாவுக்கு கோதை அம்மா தெரிவித்தார். இந்த விஷயத்தை கேட்டதும் அவர் சந்தோசத்தில் உடனே வசுந்தராவை பார்க்க கிளம்பினார். சந்திரகலாவுக்கு வசுந்தரா கர்ப்பம் ஆனதை விட சரஸ்வதிக்கு முன் முதல் வரிசை வசுந்தரா தான் கொண்டு வர போகிறார் என்று சந்தோசம் கொண்டார். வசுந்தராவுக்கு இனிப்பு வாங்கி வந்து கொடுத்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சரஸ்வதி வெளியே வாங்கி வந்த இனிப்பு வேண்டாம் என்று அவரே செய்த இனிப்பை கொடுத்தார். இதனால் சந்திரகலா எரிச்சல் அடைந்தார். மேலும் தன் மகள் கர்பம் ஆனதை ஒரு பெரிய விழா வாக வைத்து கொண்டாட வேண்டும் என்று கூறினார். ஆனால் சரஸ்வதி அதெல்லாம் செய்தால் கண்ணு பட்டு விடும் என்று கூறினார். அதே போல் கோதையும் இதெல்லாம் தேவை இல்லாத செலவு என்று கூறினார். இதை கேட்டதும் சந்திரகலா கோவம் அடைந்தார். அதே நேரம் கீதா கோவில் பயணம் சென்று வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் மது முகம் சரி இல்லாததால் பதறினார். மேலும் அவர் வேலையை விட்டுவிட்டதாக கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…