Tamizhum Saraswathiyum Today Episode | 12.10.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 12.10.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அந்த பிரச்சனை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். ஆனால் அதற்குள் அந்த வீடியோவை எடுத்து சந்திரகலா வேறு திட்டம் போட்டார். அந்த நபரை போலீசில் புகார் கொடுக்க வைத்தார். மேலும் தமிழ் அவரை கொலை மிரட்டல் செய்தார் என்பது போல் புகார் கொடுத்து அதற்கு ஆதாரமாக அந்த வீடியோவை காட்டினார். தமிழ் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னே அவரை கைது செய்தார்கள். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினாலும் அதை அவர்கள் கேட்கவில்லை. தமிழை கைது செய்வதை பார்த்த அபி உடனே அதை வீட்டில் சொல்லி தெரிய படுத்தினார். இதை கேட்டதும் உடனே கார்த்திக் தான் போலீஸ் ஸ்டேஷனில் சென்று விசாரிப்பதற்காக கிளம்பினார். கூடவே சரஸ்வதியும் கிளம்பினார். போலீஸ் ஸ்டேஷனில் சென்று கார்த்திக் என்ன எது என்று விசாரித்தார். அதற்கு தமிழ் ஒரு நபரை கொலை செய்ய முயற்சி செய்து இருப்பதாகவும் தன்னால் புகார் வந்து இருப்பதாகவும், அவரை பலமாக காயப்படுத்தி இருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் கார்த்திக் மயரும் சரஸ்வதி இவர் அப்படி செய்து இருக்க மாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் போலீஸ் அதை காதில் வாங்க வில்லை. நாளை கோர்ட்டில் வந்து pesikkollungal என்று விரட்டுவதில் தான் குறியாக இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…