தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கீதாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கு சரஸ்வதி வந்தார். வந்து கோதை குடித்த காபியில் மயக்க மருந்து கலக்கும் விஷயம் எனக்கு இரவு நீங்கள் பேசிக்கொண்டு இருந்த போது கேட்டதாக கூறினார். அதனால் காலையில் இருந்து அவர்கள் இருவரையும் கண்காணித்து கொண்டு இருந்தேன் என்றும் கூறினார். பின் சந்திரகலா மற்றும் கீதாவுக்கு அறிவுரை கூறினார். இதை கேட்ட சந்திரகலா இன்னும் கோபம் கொண்டார். இருந்தும் அவரது மகள் அந்த வீட்டுக்கு மருமகளாக போனதால் இனி அந்த வீட்டின் பிடி தன் கையில் என்று நினைத்துக்கொண்டார். சரஸ்வதி தன் வீட்டிற்க்கு கிளம்பினார்.கோதை மிகவும் மகிழ்ச்சியோடு வழி அனுப்பினார். தமிழை வீட்டில் விட்டு வருமாறு கூறினார். சொக்கலிங்கம் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார். அதில் இரவு கோதை வீட்டு கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்களை பேப்பரில் இருப்பதை பார்த்தார். அதில் தமிழ் இருப்பதை பார்த்து கோவம் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….