Tamizhum Saraswathiyum Today Episode | 12.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் அவரது குடும்பத்தை அனைவர் முன்னிலையிலும் திட்டித்தீர்த்தார். கோதை மற்றும் நடேசன் இருவரும் சங்கடத்தில் நின்றார்கள். பின் அர்ஜுன் அம்மா இந்த அளவு உங்களை காயப்படுத்தி இருக்கும் என்று எனக்கு தெரியாது. அதனால் நாங்கள் இப்போவே கிளம்புகிறோம் என்று கூறினார். மேலும் அவரது வீட்டில் வாங்கிய நகை துணிகளை எடுத்து கொடுக்க சொன்னார். ஆனால் கொதி எதெல்லாம் திரும்ப தர வேண்டாம். சம்மந்த வீட்டில் இருந்து இப்படி நடந்து கொண்டால் எங்களுக்கும் சங்கடம் . அதனால் அவர்கள் இருக்கும் இந்த 10 நாள் அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல் அவர்களுக்கு விருப்பமான சாப்படை சமைத்து கொடுக்கும்படி கோதை கூறினார். இதில் குடும்பமே அர்ஜுன் செய்தது பெரிய விஷயம் என்று பாராட்டினாலும் சரஸ்வதிக்கு மட்டும் அவர் குடும்பமே நடிப்பது போல் இருப்பதாக கூறினார். இருந்தும் தமிழிடம் இதை பற்றி பேசினால் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author