Tamizhum Saraswathiyum Today Episode | 13.02.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 13.02.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவின் வளைகாப்பு வேலைகள் நடந்தது. வசுந்தராவை அலங்காரம் செய்து தயார் செய்தார்கள். அப்போது மீண்டும் சரஸ்வதியை குத்திக்காட்டினார். பின் சந்திரகலா வளைகாப்புக்கு வந்து சேர்ந்தார். ஆனால் வசுந்தரா அவரை முகத்தை பார்த்து பேச மறுத்தார். பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. சரஸ்வதியின் குடும்பம் வரவில்லை என்று அவர் மனதில் குமுறினார். ஆனால் கோதை நேரில் சென்று சரஸ்வதி குடும்பத்தை அழைத்து இருந்தார் என்பது கொஞ் நேரத்தில் தெரிய வந்தது. சரஸ்வதி எந்த சடங்கிலும் கண்டுகொள்ளாதது போல் தனியாகவே ஒதுங்கி இருந்தார். அனைவரும் நலங்கு வைத்த பின்னும் சரஸ்வதியை காணவில்லை என்று தேட ஆரம்பித்தார்கள். பின் கோதை சரஸ்வதியின் மனநிலையை யோசித்து அவருக்கு ஆதரவாக பேசி , அவரையும் சடங்குகளை செய்ய வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….