தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் நடவடிக்கையால் தன் அம்மாவின் மனதை பாதிக்குமோ என்று பயந்தார். அதை சரஸ்வதி இடம் கூறி அப்படி மட்டும் செய்து விடாதே என்று கூறினார். மேலும் கோதை மனதில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதை மீண்டும் கூறினார். சற்று நேரத்தில் கோதை வீட்டுக்கு தெரிந்தவர்கள் வந்தார்கள். திருமணத்திற்கு வர முடியாமல் போனதால் இப்போது வந்தார்களாம். பின் மருமகள்கள் இருவரையும் பார்த்து பேசினார்கள். அப்போது சரஸ்வதியின் கை பக்குவம் பற்றி கூறினார்கள். தங்களுக்கும் டீ கிடைக்குமா என்று கேட்டார்கள். சரஸ்வதி தன்னால் டீ போட முடியாது என்பதால் அதை சாதுர்யமாக பேசி சமாளித்தார். அதை பார்த்து கோதைக்கு ஒரு நல்ல மதிப்பு வந்தது சரஸ்வதி மேல். கார்த்திக் கம்பேனியின் வெளியே சென்று வந்தவர்களை திட்டி தீர்த்தார். அதன் பின் தமிழ் கார்திக்கிற்கு அறிவுரை கூறினார். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பணிவாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…