Tamizhum Saraswathiyum Today Episode | 13.05.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 13.05.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அடுத்த நாள் என்ன சமைப்பது என்று கோதை இடம் கேட்டு தெரிந்து கொண்டார். கோதையும் சிறுதானிய சாப்பாடு இந்த நாளுக்கு இது தான் என்று ராகினி வைத்து இருப்பர், அதை வாங்கிக்கொள் என்றார். மேலும் அடுத்த நாள் காலையில் எழுந்ததும் சரஸ்வதி வீட்டில் பூஜை செய்து வீடு முழுக்க சாம்பிராணி போட்டு சமைக்க ஆர்வமாக இருந்தார். காலை உணவு சிறுதானியத்தில் ருசியாக சமைத்தார். அனைவருமே சாப்பிட்டு சரஸ்வதியை பாராட்டினார்கள். கோதை முதல் முதலாக அதை சாப்பிட்டு அவரும் பாராட்டினார். அதே நேரம் சந்திரகலாவால் இடன்க அவமானத்தை மறக்கவும் முடியவில்லை ஏறுகொள்ளவும் முடியவில்லை. அதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியாமல் தவித்தார். எதிலும் கவனம் இல்லாமல் இருந்தார். இதை கவனித்த ஆதி தன் அம்மாவிடம் விசாரித்தார். சந்திரகலா தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சரி செய்ய வேண்டும் என்று கூறினார். கோதை வீட்டில் வேலை செய்த அபியை கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறினார். மாப்பிள்ளை கூட அவளை வளசரவாக்கம் பக்கம் பார்த்ததாக கூறினார். அப்போது அபி அங்கு தான் இருப்பாள் என்று கூறினார் சந்திரகலா. மின்னல் வீட்டுக்கு அருகில் தான் இருக்க வேண்டிய என்று வியூகித்தார். உடனே மின்னல் வீட்டுக்கு அருகில் சென்று விசாரிக்க ஆரம்பித்தார். அங்கு விசாரித்ததில் அபி மின்னல் வீட்டில் தங்கி இருப்பது சந்திரகலாவுக்கு தெரியவந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…