Tamizhum Saraswathiyum Today Episode | 13.06.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 13.06.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் வீட்டுக்கு நடேசன் udna வந்து சேர்ந்தார். வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து அவர்களை ஆவலோடு எதிர்பார்த்து நின்றார்கள். கோதையும் போன வேலை நல்ல படியாக முடிந்துவிட்டது என்று கூறினார். இதனால் வீட்டில் அனைவருமே சந்தோசத்தில் இருந்தார்கள். ஆனால் கார்த்திக் சற்று சோர்வாக இருந்தார். பூஜை செய்து சாமி கும்பிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம் என்று நடேசன் கூறினார். ஆனால் கோதை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வந்த பின் பூஜை செய்யலாம் என்று கூறினார். மேலும் ஸ்ட்ரு நேரத்தில் தமிழ் மற்றும் சரஸ்வதி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். உடனே கோதை சரஸ்வதியை அழைத்து அவரை விளக்கு ஏற்றி பூஜை செய்யுமாறு கூறினார். அதை ஆச்சர்யமாக பார்த்தார் சரஸ்வதி. நீதான் இந்த காண்ட்ராக்ட் கிடைக்க முக்கிய காரணம், அதனால் என்னுடைய பரிசு என்றார் கோதை. உடனே சரஸ்வதியும் சந்தோசத்தில் விளக்கு ஏற்றி பூஜை செய்தார். ஆனால் இது எதுவும் கார்த்திக்கு பிடிக்க வில்லை. எரிச்சல் அடைந்தார். தமிழ் சரஸ்வதியை மால் ஒன்றுக்கு அழைத்து சென்று அவருக்கு பிடித்ததை வாங்கி குடுத்தார். வேறு உடை அணிந்து, அவருக்கு விருப்பமான சாப்படுகளை வாங்கி கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…