Tamizhum Saraswathiyum Today Episode | 13.07.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 13.07.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமா என்று கோதை கிளம்பினார். ஆனால் கார்த்திக் அதை தடுத்தார். இதனால் கோதைக்கு மேலும் கோவம் வந்தது. சந்தேகமும் வந்தது. என்ன காரணத்துக்காக போக வேண்டாம் என்று கேட்டார். ஆனால் கார்த்திக் அதற்கும் பதில் சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால் கோதை விடாமல் அழுத்தி கேட்டதால் கார்த்திக் அனைவர் முன்னிலையிலும் தானும் வசுந்தராவும் கணவன் மனைவியாக வாழவில்லை என்று கூறினார். இதை கேட்ட கொதைக்கு அதிர்ச்சியில் மயக்கம் வந்தது. பின் ஸ்டரு நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் கார்த்திக் வசுந்தராவிடம் பேச ஆரம்பித்தார். இருவரும் ஆசைப்பட்டு காதலித்து தானே திருமணம் செய்து கொண்டீர்கள், யாரும் கட்டாயபடுத்தி இந்த திருமணம் நடக்கவில்லை பின் எதற்காக கணவன் மனைவியாக வாழாமல் இருக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் அதற்கு கார்த்திக் வசுந்தரா இருவரும் எந்த பதிலும் சொல்ல வில்லை. அந்த நேரம் அங்கு வந்த சந்திரகலா உடனே கத்த ஆரம்பித்தார். என் மகள் இந்த வீட்டில் வந்து கொடுமையை அனுபவிக்கிறாள், இந்த வீட்டில் வாழாவெட்டியாக இருப்பதற்கு என் வீட்டிலே இருக்கலாம் என்று கூறினார். மேலும் இதற்கு காரணம் தன் தான் என்று ஒத்துக்கொண்டார். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…