Tamizhum Saraswathiyum Today Episode | 13.10.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 13.10.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேரக்கூடாது என்பதற்காக சந்திரகலா ஏற்பாடு செய்த திட்டப்படி எல்லாம் நடந்தது. தமிழை ஜெயிலில் ஒரு நாள் இரவு மட்டும் வைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் அதேக்கு மாறாக நடந்தது. போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீர் என்று ACP வந்தார். அவர் கார்த்திக்கை பார்த்ததும் நீங்கள் கோதை இண்டஸ்ட்ரீஸ் ஓனர் கோதை அம்மா பையன் கார்த்திக் தானே என்று கேட்டார். மேலும் நடேசன் அவர்களையும் எனக்கு தெரியும், அந்த கம்பேனியில் தான் என் அப்பா வேலை செய்தார். என்னை படிக்க வைத்தது கோதை அம்மா தான் என்று கூறினார். பின் இங்கு என்ன பிரச்சனை என்று விசாரித்தார். பின் தமிழையும் விசாரித்தார். அதன் பின்னர் தான் அந்த நபர் ஒரு திருடன் அவன் சொல்வது எதுவும் உண்மை இல்லை எனவும் தெரிய வந்தது. இதனால் உடனே தமிழை வெளியே விட்டார்கள். பின் வீட்டுக்கு வந்ததும் கார்த்திக் நடந்ததை விவரமாக கூறினார். பின் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அவர்களின் வாழ்க்கையை ஆரம்பிக்க கிளம்பினார்கள். அவர்களது அறையை. முதல் இரவுக்காக ஏற்பாடு செய்து வைக்க பட்டு இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…