Tamizhum Saraswathiyum Today Episode | 13.12.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum .13.12.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் குடும்பம் என்ன சாப்பிடுவார்கள் என்று கேட்டு கேட்டு சரஸ்வதி சமைத்து இருந்தார். அதை சாப்பிட்டதோடு இல்லாமல் மேலும் அதில் ஏகப்பட்ட குறைகள் கூறினார்கள். அவர்கள் இது வரை என்னவெல்லாமோ சமைத்து சாப்பிட்டவர்கள், இப்படி ஒன்று இரண்டு வகை மட்டுமே சமைத்து இருக்கிறார்கள் என்று கூறினார்கள். அதை பார்த்த வசுந்தரா, சரஸ்வதி அருமையாக சமைத்து வைத்து இருக்கிறார். ஆனால் அதில் இத்தனை குறை சொல்ல எப்படி மனம் வந்தது என்று கோதையிடம் வருந்தினார். பின் வசுந்தரா அவரது மாமனார் மாமியார் இடம் பேசி சிரித்து கொண்டு இருந்ததை பார்த்து அர்ஜுனின் அம்மா மற்றும் அக்கா இருவரும் இந்த சிரிப்பு சத்தம் இனி இருக்கவே கூடாது. இந்த குடும்பம் நிம்மதி இல்லாமல் போக வேண்டும் என்று மனதில் வன்மத்தை வைத்துக்கொண்டு இருந்தார்கள். ராகினி இன்று அர்ஜுனுக்கு தானே சாப்பாடு எடுத்து செல்வதாக கூறினார். ராகினி சாப்பாடு கொண்டு வரும் நேரம் பார்த்து அர்ஜுன் அவர் திட்டத்தை ஆரம்பித்தார். செல்வம் இவரை மட்டமாக பேசுவது போல் நாடகத்தை நடத்தினார். நீயும் என்னைப்போல் ஒரு வேலை பார்க்கும் ஆள் தான். நீ சொல்வதை எல்லாம் என்னால் கேட்க முடியாது. நீ ஒன்னும் இங்கு முதலாளி இல்லை என்று மரியாதை இல்லாமல் பேசினார். இதை கேட்ட ராகினி கோவத்தில் கொந்தளித்தார். எப்படி என் கணவரை மட்டமாக பேசலாம் என்று கத்த ஆரம்பித்தார். ஆனால் அர்ஜுன் அவர் சொல்வது சரி தானே நான் இங்கு ஒரு வேலை பார்க்கும் நபர் மட்டுமே அவரை கண்டிக்கும் அதிகாரம் தமிழ் மற்றும் கார்த்திக்கு மட்டுமே உண்டு என்று அழுத்தமாக கூறினார். உடனே வீட்டுக்கு வந்து ராகினி கத்த ஆரம்பித்தார். அண்ணன்களை போல் இவரும் இந்த கம்பேனியில் ஒரு முதலாளி போல் ஆக வேண்டும் என்று கூறினார். அதை கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….