தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் தூரத்தில் கூட தமிழ் மற்றும் சரஸ்வதியை கோதையை பார்க்க நடேசன் அனுமதிக்கவில்லை. சரஸ்வதியின் பாட்டிக்கு ஒரே இடத்தில் இருப்பதால் சோர்வு, மயக்கம், குளிர் என்று அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தது.ஆனால் அவர் வீட்டுக்கு போக மறுத்தார். கோதைக்கு குணமடைந்து தமிழ் சரஸ்வதிக்கு ஒரு வழி செய்து தான் வீட்டுக்கு கிளம்புவேன் என்று கூறினார். சந்திரகலா இந்த குடும்பத்தின் மேல் அக்கரை இருப்பது போல் நடந்துகொண்டார். அதை பார்த்த நடேசன், அவரை பார்த்து ஆச்சர்யபட்டார், பின் நன்றியும் கூறினார். கார்த்திக் சந்திரகலா மீது இருந்த கோவங்களை மறந்து அவரை மாமியாராக மதித்து பேசினார். தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு இடையே வாக்குவாதம் வந்தது. இதனால் அது கை கலப்பு ஆனாது. கார்த்திக் தன்னால் அங்கு வர முடியாது என்று ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். இதை கேட்ட சந்திரகலா தான் இந்த பிரச்சனையை சரி செய்வதாக கூறினார். தமிழ் என்ன நடந்தது என்று விசாரித்தார், ஆனால் அவரை ஒதுங்கியே இருக்கும்ப்தி நடேசன் கூறினார். சந்திரகலாவும் அந்த கம்பேனியே தன் வசம் வந்தது போல் பேசி கார்த்திக்கை அழைத்துச் சென்றார். சொக்கலிங்கம் தன் மகள் மற்றும் மருமகன் நிலையை பார்த்து வருத்தப்பட்டார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…