தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதியை மரு வீட்டு விருந்துக்கு அழைத்துச் செல்ல சொக்கலிங்கம் மற்றும் அவரது குடும்பம் கோதை வீட்டு வாசலில் நின்றார்கள். அவர்களை பார்த்த நடேசன், எதற்காக மீண்டும் இங்கு வந்து என் வீட்டின் நிம்மதியை கெடுக்க வேண்டும் என்று கத்தினார். வீட்டில் அனைவரும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். கார்த்திக் அவர்களை பார்த்ததும் கிவ்தில் அவர்களை திட்ட வெளியே வந்தார். அவருக்கு முன் தமிழ் முன் வந்து, சொக்கலிங்கத்தை மரியாதை இல்லாமல் பேசினார். இனி இந்த குடும்பத்துடன் ஓட்டும் இல்லை உறவும் இல்லை என்று ஆன பின்னும் எதற்கு இந்த வீட்டுக்கு வர வேண்டும் என்று கூறினார். பின் ஒரு முறை வீட்டுக்கு வர கூடாது என்று கூறினார் சூடு சுரணை இருப்பவர்கள் யாரும் இப்படி வரமாட்டார்கள் என்றும் கூறினார். ஆனால் தமிழ் இப்படி பேசுவார் என்று சற்றும் எதிர்பார்க்காத குடும்பம், அதிர்ச்சியில் நின்றது. கோதை நடப்பதை பார்ப்பதோடு சரி, வேறு எதையும் சொல்லவில்லை. சரஸ்வதி தமிழ் பேசுவதை பார்த்து சுக்கு நூறாக உடைந்து போனார். தன் அமம் அப்பாவை தன் கணவர் கீழ்த்தரமாக பேசுகிறார் என்று வருந்தினார். பின் தமிழ் பேசியதை கேட்டு சொக்கலிங்கம் அவர் வீட்டுக்கு அவமானதுடன் கிளம்பினார். சொக்கலிங்கம் வீட்டில் யாருமே இதை எதிர் பார்க்கவில்லை. தமிழ் எப்படி இவளோ பெரிய விஷயம் செய்ய முடியும். மரியாதை இல்லாமல் பேசுவது அவர் செய்யும் காரியம் இல்லை என்று நொந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த மின்னல் சரஸ்வதி வீட்டில் நடந்த அனைத்தயும் விவரித்தார். கோதை தன் மகன்களுக்கு இனி மாத சம்பளம் தரப்படும் எனவும், இவர்கள் வேலை பார்க்க வேண்டும் எனவும் சொன்னதை பற்றி விவரித்தார். இதை கேட்டதும் சொக்கலிங்கம், தான் வாங்கிய கடனுக்கு எதற்காக தமிழ் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணினார். அதற்காக அவர் என்ன முடிவு எடுத்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..