தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அம்மா தன் குடும்பத்தோடு சந்திரகலா வீட்டுக்கு வந்தார். வந்ததும் வீட்டு வாசலில் அலங்காரம் எல்லாம் பார்த்து ஆச்சரிய பட்டார்கள். எதற்கு இந்த வீண் செலவு, எதற்கு இந்த பந்தா என்று. பின் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் ஏற்கனவே ஒரு பெரிய கூட்டமே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். இவர்களை சந்திரகலா ஒன்றுமே தெரியாதது போல் வரவேற்றார். ஆனால் கோதை எதற்கு இத்தனை பேர் என்று கேட்டதற்கு எப்படியும் சின்ன விசேஷம் தானே என்று குறிப்பிட்ட சில பேரை மட்டுமே அழைத்து இருபப்தாக கூறினார். இதனால் கோதையின் முகமே மாறிப்போனது. வசுந்தரா இதனால் கொஞ்சம் படட்டம் ஆனார். ஆனால் வசுந்தரா ஸ்னதோசதுக்காக வீட்டில் யாருமே எதையும் வெளிக்காட்டிக்காமல் இருந்தார்கள். அந்த விஷேஷதில் கூட சரஸ்வதி வசுந்தராவை கூடவே இருந்து கவனித்துக்கொண்டார். இதை பார்த்து சந்திரகலா மற்றும் கீதா இருவருமே எரிச்சல் அடைந்தார்கள். வசுந்தரா கூடவே இவளும் ஒட்டிக்கொள்கிராள் என்று முனு முனுத்தார்கள். இதனால் சரஸ்வதியை தனியாக பார்த்து பேசினார் சந்திரகலா. வசுந்தரா கர்பமாக இருக்கும் இந்த நேரத்தில் நீ அவளுடன் கூடவே இருப்பது நல்லதல்ல என்னது போல் பேசினார். வந்து இருக்கும் சொந்தங்கள் உனக்கு குழந்தை இல்லை என்பதை குத்தலாக பேசுவார்கள் என்று அவர் மனதில் நினைத்ததை கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…