Tamizhum Saraswathiyum Today Episode | 14.10.2021 | Vijaytv
tamizhum Saraswathiyum.14.10.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் தங்களை பற்றி ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக நினைத்து பேசிக்கொண்டு இருந்தனர். சற்று நேரத்தில் கோதை தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து, சந்திரகலா நேரத்தை மாத்தி கூறியதை சொன்னார். பின் அவசரமாக கோவிலுக்கு கிளம்பிக்கொண்டு இருப்பதாகவும்,தமிழை நேராக கோவிலுக்கும் வரச்சொன்னார். தமிழ் முதலில் அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் கோதை குடும்பத்துடன் காரில் வந்து சேர நேரம் ஆகியது. இதனால் பொறுமை இழந்ததை போல் தமிழிடம் நடித்து கோதை வருவதற்கு முன்பே தாலிக்கு பொன் உருக்கும் சடங்கை ஆரம்பித்தார் சந்திரகலா. தமிழ் எவளவோ முயன்றும் அதை தடுக்க முடியவில்லை. சற்று நேரத்தில் கோதையும் அங்கு வந்து சேர்ந்தார். நடந்ததை பார்த்து வாய் அடைத்து போய் நின்றார்.இதற்கிடையில் சரஸ்வதி வீட்டில் என்ன நடந்தது? காணொளியை பார்க்க….