Tamizhum Saraswathiyum Today Episode | 14.10.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 14.10.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் முதல் இரவு முடிந்து அவர்களது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். முதல் முறையாக வாழ்க்கையை ஆரம்பித்த தமிழ் சரஸ்வதியை விட்டு பிரிய மனம் இல்லாமல் இருந்தார். அதை கவனித்த கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் அவர்களை கிண்டல் கேலி செய்தார்கள். காலையில் சாப்பாடு சாப்பிடும் இடத்தில் கூட சரஸ்வதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார் தமிழ். மேலும் வார் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் செய்தார் தமிழ். இதனால் நடேசன் குழப்பம் அடைந்தார். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இப்படி இருக்க மாட்டார்களே என்று கூறினார். ஆனால் கோதை, மகனும் மருமகளும் இப்படி இருப்பது சந்தோசம் தான் என்று கூறினார். பின் வேலைக்கு கிளம்பினார்கள். ராகினி பரிட்சை எழுத அவசரமாக கிளம்பினார். பின் பரிட்சை எழுதி முடித்து வீட்டுக்கு கிளம்பும்போது மழை வந்தது. அவரது தோழிகள் ஆதி, அர்ஜுன் இருவரில் யாரை காதலிக்க போகிறாய் என்று கேட்டார்கள். ஆனால் ராகினி எதுவும் முடிவு செய்யவில்லை என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் போட்டி வைக்க நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…