தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் ராகினி வீட்டில் இல்லை, நிச்சயம் நடக்கப்போகும் நேரத்தில் ராகினி அர்ஜுன் திருமணம் செய்ய திட்டம் போட்டு இருப்பது தெரிய வந்தது. உடனே வீட்டுக்கு வந்த சொந்தங்கள் கோதை வளர்ப்பு சரி இல்லை என்று பேச ஆரம்பித்தார்கள். உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமே, அவரவர் வீட்டில் அது பொருந்தாது என்று பேசினார்கள். அந்த நேரம் அர்ஜுன் மற்றும் ராகினி வீட்டுக்கு திருமண கோலத்தில் வந்து நின்றார்கள். அவர்களை பார்த்ததும் கார்த்திக் கோவத்தில் அர்ஜுன் சட்டையை பிடித்து கோவத்தை காட்டினார். எப்படி எங்கள் வீட்டுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய முடிந்தது என்று கேட்டார். கோதை தன் வளர்ப்பு தன் வளர்ப்பு என்று மகளை நம்பியது என் தவறு தான் என்றார். ராகினி அப்போது தனக்கும், அர்ஜுனுக்கும் இன்னும் திருமணம் முடியவில்லை என்று கூறினார். அதன் பின் அர்ஜுன் தான் பெற்றோர் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் வேண்டாம். இப்படி செய்தாலும் உங்கள் வீட்டு கௌரவம் போகும் என்று அறிவுரை கூறி அழைத்து வந்ததாக கூறினார் ராகினி. இந்த நேரம் சந்திரகலாவின் மகனுக்கு மீண்டும் நிச்சயம் செய்து வையுங்கள் என்று கூறினார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து சந்திரகலா இவளோ பாரம்பரியமான ஆள், அவர் எப்படி வேறு ஒரு பையனை விரும்பும் பெண்ணை, தன் மகனுக்கு கட்டி வைப்பார் என்று எத்திவிட்டர்கள். இதனால் கோதையும் தன் மகள் விருப்பத்தை கேட்காமல் இந்த திருமண எர்ப்படு செய்தது என் தவ்ரு தான் என்று மன்னிப்பு கேட்டார். மேலும் ராகினி விருப்பப்படி தான் இந்த திருமணம் நடக்கும் என்றும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…