தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சிக்கலிங்கத்தை தனியாக பார்த்து பேசினார். அவர் காலையில் கடுமையாக பேசியதற்கு என்ன காரணம் என்று கூறினார். கார்த்திக் அல்லது நடேசன் பேசினால் நானே உங்களுக்காக விட்டு கொடுக்காமல் பேசி இருப்பேன். அது மேலும் பிரச்சனை ஆகும். அதனால் தான் அப்படி பேசினேன் என்று விளக்கினார். சொக்கலிங்கம் அதை கேட்டதும் கண் கலங்கினார். பின் அவர் கொண்டு வந்த 20 லட்சம் பணத்தை கொடுத்தார். சரஸ்வதி நகையை அடகு வைத்து கொண்டு வந்து இருந்தார். ஆனால் தமிழ் அதை வாங்க மறுத்துவிட்டார். இந்த பணத்தை வாங்கினால் நான் வரதட்சணை வாங்கியதாக இருக்கும் என்று மறுத்துவிட்டார். பின் மாத சம்பளம் தரப்படும் விஷயம் பற்றி பேசி வருந்தினார் சொக்கலிங்கம். சரஸ்வதிக்கு நடந்தவை அனைத்தையும் மின்னல் கூறினார். தமிழ் எதற்காக அப்படி பேசினார் அடுத்து என்ன நடந்தது என்று அனைத்தையும் கூறினார். அதை கேட்டதும் தமிழை தவறாக நினைத்ததற்கு வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…