Tamizhum Saraswathiyum Today Episode | 15.07.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 15.07.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ், சரஸ்வதி, கார்த்திக், வசுந்தரா நால்வரும் தேனிலவு பயணம் செல்ல தயார் ஆனார்கள். கோதை அம்மா அவர்களுக்கு சாமி கும்பிட்டு ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால் கார்த்திக்கு தமிழ் சரஸ்வதி உடன் செல்வது பிடிக்கவில்லை. ஆனாலும் கோதை அம்மா சொன்ன காரணத்துக்காக வேறு வழி இல்லாமல் கிளம்பினார். போகும் வழியில் சரஸ்வதி பேசிக்கொண்டே வந்தார். மலையில் வண்டி ஏறி செல்லும்போது ஆச்சர்யமாக ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தார்கள். ஆனல் கார்த்திக் எதையும் பொருட்படுத்தாமல் முகத்தை சோகமகாவே வைத்து இருந்தார். ஆனாலும் வசுந்தரா அவரை சமாதானம் செய்து கூட்டி வந்தார். மேலும் கார்த்திக் மனம் மாறி வசுந்தரா உடன் நெருக்கமாக வர ஆரம்பித்தார். ஆனால் அதை கவனிக்காமல் சரஸ்வதி சாப்பிட குடுக்கவும், மயில் செல்கிறது என்று ஒவ்வொரு முறையும் அவர்களை வெறுப்பேற்றும் வகையாக நடந்தார். ஒரு இடத்தில் தமிழ் வண்டியை வேகமாக நிறுத்தினார். இத்தாலிய வசுந்தரா தவறி விழும் நிலை வந்தது. இதை பார்த்த கார்த்திக் மேலும் அவர்கள் மீது கோவம் கொண்டார். கத்தினார். ஆனால் வசுந்தரா அவரை சமாதானம் செய்தார். இதற்கு இடையில் தமிழ் சரஸ்வதியும் அப்பப்போ ரொமான்ஸ் வேறு நடந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…