தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் அனைவரும் கிளம்பி இருந்தார்கள். சந்திரகலா தன் மகளிடம் தனியாக பேசுவதற்காக சூதகமாக பேசி வசுவை மாடிக்கு அழைத்து வந்தார்.மாப்பிள்ளை கோபம் தீர்ந்ததா என கேட்டார். ஆனால் வசு பிரச்சனை இன்னும் முடியவில்லை என உணர்த்தினார். பின் அனைவரும் சொக்கலிங்கம் வீட்டிற்க்கு சென்றார்கள். போனதும் கோதை சரஸ்வதி வீட்டில் அனைவரிடமும் ரொம்ப நாள் பலகியதுபோல் பேசி பழகினார். சந்திரகலா இந்த திருமணத்தை நிறுத்த எல்லா முயற்சியும் எடுத்தார். சொக்கலிங்கத்திடம் வீடு இவளோ சின்னமாக இருக்குதே? படிச்ச பெண் எதற்கு வேலைக்கு செல்லவில்லை? எந்த காலேஜ் இல் படித்தார் சரஸ்வதி? இப்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கினார்.ஆனால் கோதை அதற்கு சமாலிக்கும்படி பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…