Tamizhum Saraswathiyum Today Episode | 15.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.12.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியிடம் எப்படி பேசினால் எப்படி அவர் கோவத்தை தூண்டலாமோ அப்படி பேசினார்கள். அர்ஜுன் குடும்பமே ராகினியின் மனநிலையை மாற்றினார்கள். அர்ஜுன் அக்கா மாமா மற்றும் வராது அம்மா மூவரும் ஊருக்கே கிளம்பலாம் என்று பேசினார்கள். மேலும் அர்ஜுன் அப்பாவை போல் நீயும் ஒரு நல்ல நிலையில் வேலை பார்ப்பது எனக்கும் கௌரவம்தானே. எனக்கு மட்டும் இப்படி ஒரு ஆசை இருக்காதா? என்று வேண்டும் என்றே ராகினி முன் கண் கலங்கி பேசினார். அதை பார்த்த ராகினி உடனே தன் அம்மாவிடம் இதை பற்றி பேச கீழே சென்றார். தன் அம்மாவிடம் அதிகாரமாக கோவமாக என்ன முடிவு எடுத்து உள்ளார் என்று கேட்டார். கோதை அதற்குள் எப்படி முடிவு எடுப்பது என்று புரியாமல் நின்றார். சரஸ்வதி, வசுந்தரா, கார்த்திக் அனைவருமே சற்று யோசித்து கொஞ்ச நாளில் இந்த பதவி கொடுக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் ராகினி உடனே என் கணவருக்கு இந்த உரிமை கிடைக்க வேண்டும் என்று கூறினார். இல்லை என்றால் இப்போதே நன்றிகள் தனியாக அவீடு பார்த்து செல்கிறோம். வேலையும் வேறு எங்காவது பார்த்துக்கொள்வார் என்று கூறினார். இதை கேட்ட கோதை அதிர்ச்சி அடைந்தார். உடனே அதற்கு அவசியம் இல்லை, மாப்பிள்ளைக்கு என்று இருந்தாலும் இந்த பொறுப்பை கொடுக்க வேண்டும்தான். அதனால் அதை இப்போதே கொடுக்க நான் முடிவு எடுத்து விட்டேன் என்று கூறினார். சரஸ்வதி இதில் அவசரப்பட வேண்டாம் என்று கூறினார். ஆனால் கோதை இதுதான் கடைசி முடிவு என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…