தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியிடம் அன்று நடந்ததை கூறினார். அர்ஜுன் இந்த காண்ட்ராக்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி நம் கம்பேனியின் பெயரை கெடுக்கும் விதமாக நாட்ந்து கொள்கிறார் என்று கூறினார். அதை கேட்ட சரஸ்வதி கோவத்தில் கத்தினார். இவளோ பெரிய தவறை செய்ய எப்படி மனம் வந்தது என்று கேட்டார். இதை கண்டிப்பாக கோதை மற்றும் நடேசன் இடம் கூற வேண்டும் என்று கூறினார். ஆனல் தமிழ் அவரை தடுத்தார். ஆனால் இவர்கள் பேசுவதை கோதை மற்றும் நடேசன் இருவரும் கேட்டுவிட்டார்கள். உடனே தமிழ் இடம் இதை பற்றி கேட்டார்கள். ஆனால் அதை தமிழ் சொல்ல தயங்கினார். பின் வேறு வழி இல்லாமல் உண்மையை கூறினார். உடனே அர்ஜுனை அழைத்து கண்டித்தார்கள். இந்த மாதிரி குறுக்கு புத்தி இருப்பவருக்கு வெற்றி நிலையாக இருக்காது என்று கூறினார்கள். பின் அர்ஜுன் இந்த பிரச்சனையை வைத்து பெரிது படுத்த ராகினி யிடம் தமிழ் தான் இதை கோதையிடம் கூறி விட்டார் என்று கூறினார். இதை கேட்ட ராகினி மேலும் கோவத்தில் கத்த ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….