Tamizhum Saraswathiyum Today Episode | 16.03.2022 | Vijaytv
Tamizhum Saraswathiyum. 16.03.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை பல நாட்கள் கழித்து அவரது கம்பேனிக்கு வந்தார். வேலை மற்றும் தொழிலாளர்களை பார்த்து செல்லலாம் என்று வந்து இருந்தார். வந்த இடத்தில் அனைவரும் அவரை நலம் விசாரித்தார்கள். பின் வேலை நிர்வாகம் என்று அனைத்தை பற்றியும் விசாரித்தார். சண்முகம் எதோ மறைத்து மறைத்து, மழுப்பலான பேசியது போல் இருந்தது. அதனால் கோதை அவரை தனியாக அழைத்து பேசினார். அதன் பின் இங்கு நடக்கும் எதும் சரி இல்லை என்று ஒன்றன் பின் ஒன்றாக கூறினார். கோதைக்கு உடம்பு சரி இல்லாத போது, இங்கு நடந்த பிரச்சனையை சரி செய்வதாக கூறி சந்திரகலா மேலும் பிரச்சனையை வளர்த்துவிட்டார் என்ற உண்மையை கூறினார். சந்திரகலா மிகவும் அதிகாரமாக பேசினார். உடனே வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்றும் மிரட்டினார். ஆனால் அதனால் யாரும் வேலை பார்க்கவில்லை. தமிழ் எங்களை அழைத்து பேசினார். அவர் கோதை இண்டஸ்ட்ரிஸ் இப்படி ஆகி விட்டதா என்ற பெயரை தான் வாங்கி கொடுக்க வேண்டுமா, அம்மா உடல் நிலை சரி ஆகும் வரை பொறுமையாக இருக்கலாம் என்றும் கூறியதால் மட்டும் தான் மீண்டும் அனைவரும் வேலைக்கு திரும்பினார்கள் என்று உண்மையை கூறினார். அது மட்டும் இல்லாமல் ஒரு மெஷின் வேலை செய்யாத போது தமிழ் தான் வந்து சரி செய்து கொடுத்தார். கார்த்திக் நடவடிக்கை திடீர் என மாறிவிட்டது எனவும் கூறினார். யாரையுமே மதிக்கவில்லை, எங்களை மரியாதை இல்லாமால் சந்திரகலாவை போலவே நடந்ததுகொள்கிறார் என்றும் கூறினார். இதை எதற்கு முன்னாடியே என்னிடம் சொல்ல வில்லை என்று நடேசன் கேட்டார். ஆனால் தமிழ் தான் இதை சொல்ல வேண்டாம் என்று கூறினார் சண்முகம். இது அனைத்தையும் கேட்டு அதிர்ச்சியில் நின்றார் கோதை. உடனே கோவிலுக்கு கிளம்பினார்கள். தமிழ் மற்றும் கார்த்திக் இருவரையும் அழைத்து பேச வேண்டும் என்று கூறினார். உடனே அவர்களை நடேசன் அழைத்து வர வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…