தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது வீட்டில் தான் மட்டும் தான் முடிவுகள் எடுக்க வேண்டும். ஒருத்தர் எடுத்தால் தான் அது சரி வரும். சரஸ்வதியை தான் முழு மனதோடு மன்னிக்கவில்லை என்பது போல் கூறினார். இதை கேட்டதும் சரஸ்வதியும் தமிழும் கலங்கினார்கள். எப்போதும் போல் மாடிப்படியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்றார்கள். கோதை தங்களை மனதார ஏறுக்கொள்ளதாதால் மீண்டும் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த முதல் இரவை நிறுத்தினார்கள். இந்த புது வாழ்க்கையை ஆரம்பிக்க நேரம் வரவில்லை என்று வருந்தினர்கள். அடுத்த நாள் காலையில் நமச்சி தமிழை அழைத்து பேசினார். ஆனால் தமிழ் தங்கள் வாழ்க்கையை இன்னும் தொடங்கவில்லை என்று கூறினார். மேலும் அதற்கு காரணம் கோதை மீண்டும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை கூறினார். பின் கார்த்திக்கை பற்றி வெளியே நீ சொன்னதாக ஒரு புரளியை கார்த்திக் நம்பி உன் மீது கோவமாக இருக்கிறான் என்பதை சொல்லி வைத்தார். மேலும் தமிழ் வருவதற்கு நேரம் ஆகும் என்பதையும் கூறினார். பின் கார்த்திக் கம்பேனிக்கு வந்ததும் அனைவரும் வணக்கம் வைத்தார்கள். ஆனால் நமச்சி வைக்கவில்லை என்று கோவம் கொண்டார் கார்த்திக். இந்த சின்ன விஷயத்தை பெரிதாக்க நம்ச்சியை அழைத்து தான் முதலாளி நீ வெறும் தொழிலாளி என்று அசிங்க படுத்தினார். மேலும் தன் அப்பாவுக்கு நீ பிறக்கவில்லை என்று மரியாதை இல்லாமல் பேசினார். அந்த சமயம் சரஸ்வதி அங்கு வந்து நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…