Tamizhum Saraswathiyum Today Episode| 17.01.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தன் மனதில்பட்டதை பேசினார். வசு தனக்காக கார்த்திக் பேசியதை நினைத்து துள்ளி குதித்தார். கார்த்திக்கை கட்டி அணைத்து தன் காதலை வெளிப்படுதினார். தன் மேல் கோவம் இருந்தாலும் எனக்காக பேசியதற்கு நன்றியும் கூறினார். பின் கார்த்திக் தன நியாயமாக தான் பேசியதாக கூறினார். நீ பேசியது தவறு எதும் இல்லை. ஆனால் உன் அம்மா செய்தது வேண்டும் என்று செய்தது போல் இருப்பதாக கூறினார். சொக்கலிங்கம் வீட்டில் வசதி குறைவு என்பதால் அதை குத்தி காட்ட வேண்டும் என்று செய்தது போல் இருப்பதாக கூறினார். உனக்கும் எனக்கும் சீர் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் வீட்டிற்கு வந்த அனைவருக்கும் 15000க்கு புடவை மற்றும் தங்க காசு என்று செய்வது அனைத்தும் சரஸ்வதி வீட்டில் இருப்பவர்களை வேதனை படுத்தவே என்று கூறினார். வசு இது உண்மையாக இருக்குமோ என்று யோசித்தார்.பின் அனைவரும் தமிழ் சரஸ்வதி திரும்பதிர்க்கு பொன் உறுக்கும் வேலையாக கோவிலுக்கு வந்தார்கள். அங்கு சந்திரகலா எப்படியும் இந்த விசேஷம் நடக்காது நடக்கவும் விட மாட்டேன் என்று முடிவுடன் இருந்தார். ஏற்கனவே இதற்கு திட்டம் போட்டுதான் வந்துள்ளார்.அப்படி என்ன நடந்தது? விசேஷம் நடந்தது முடிந்ததா? காணொளியை பார்க்க..

About Author