தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவர் வேலையை முடித்துவிட்டு கம்பேனிக்கு திரும்பினார். வந்ததும் கார்த்திக் நமச்சி இடையே நடந்த பிரச்சனையை தெரிந்து கொண்டார். நமச்சி தான் கார்திக்குக்கு நடந்த அவமானத்தை வேறு யாரிடமும் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தார். ஆனால் கார்த்திக் என் பிறப்பை பற்றி தவறாக பேசியதால் தான் கோவம் கொண்டேன் என்று கூறினார். தமிழும் கார்த்திக் செய்ததும் தவறு தான் என்று உணர்ந்தார். பின் கார்த்திக்கை பார்த்து பேசினார். நமச்சி இப்படி கார்த்திக்கு எதிராக கேலி செய்து பேசவே இல்லை என்று சத்தியம் செய்கிறான் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதை காது கொடுத்து கேட்கவே இல்லை. மேலும் கார்த்திக் செய்ததும் தவறு தான் என்று கூறினார் தமிழ். இதை கேட்டதும் ஒரு தொழிலாளிக்காக சொந்த தம்பியையே விட்டு கொடுத்து பேசுகிறார் என்றே நினைத்தார் கார்த்திக். இதனால் மேலும் கோவத்தில் கத்தினார். உடனே வீட்டுக்கு கிளம்பினார். வீட்டுக்கு போய் கொதி இடம் தனக்கு இப்படி ஒரு அவமானம் நடந்தது என்றும் நமச்சி தன்னை மதிக்கவில்லை என்றும் கூறினார். பின் கோதை இரு பக்க நியாயத்தை கேட்க வேண்டும் என்று நமச்சி மற்றும் தமிழ் வருவதற்கு காத்திருந்தார். பின் அவர்கள் வந்த பின் தமிழ் நடந்ததை கூறினார். கோதை நம்ச்சியிடம் கார்த்திக்கை பார்த்து மன்னிப்பு கேட்கும்படி செய்தார். ஆனால் அதற்கு பின் சரஸ்வதி கார்த்திக் தவறான வார்த்தையை பேசியதை தவறு என்று எடுத்து கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…