Tamizhum Saraswathiyum Today Episode | 17.08.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 17.08.2022 1
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசனுக்கு டீ போட்டு கொடுத்தார் வசுந்தரா. ஆனால் அது வாயிலே வைக்க முடியாத அளவு இருந்தது. இதை கவனித்த வசுந்தரா நடேசன் இடம் அவர் மனதில் இருப்பதை கேட்டு தெரிந்து கொண்டார். நடேசனும் இரண்டு குடும்பமும் சேர வேண்டும் என்று தான் ஆசை படுகிறேன். ஆனால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளி மேலும் பிரச்சனையை பெரிதாக்கிவிட்டார் சொக்கலிங்கம் என்று கூறினார். ஆனல் சரஸ்வதி எப்போதும் நிதானமாக யோசிக்கும் பெண், அவள் எப்படி கோவத்தில் அம்மா வீட்டுக்கு திடீர் என்று கிளம்பி விட்டதால் மேலும் வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். ஆனால் வசுந்தரா இப்போதும் சரஸ்வதிக்கு பரிந்து பேசினார். சரஸ்வதிக்கும் அவரது அப்பா அம்மாவை பார்க்க ஆசை இருக்காதா என்ன என்று கேட்டார். அப்போது சரஸ்வதி வசுந்தராவுக்கு அழைத்து பேசினார். ந்து வீட்டில் என்ன நிலை? கோதை நடேசன் இன்னமும் கோவமாக இருக்கிறார்களா? என்று விசாரித்தார். ஆனால் சரஸ்வதியை சமாதானம் செய்து அவர்கள் எந்த கோவத்திலும் என்று சமாளித்தார் வசுந்தரா. சரஸ்வதி ஃபோனில் பேசுவதை கேட்ட மின்னலுக்கு சரஸ்வதி சொன்னது அனைத்தும் பொய் என்று தெரிய வந்தது. மேலும் தமிழ் நமச்சி இடம் நடந்ததை கூறினார். அவரும் சரஸ்வதிக்கு பரிந்து பேசினார். அதே நேரம் ராகினி ஆதியை பார்த்து அவரது காதலையும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…