தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் மற்றும் ராகினி நிச்சயம் நல்லபடியாக முடிந்தது. கோதை நடேசன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். இதை பார்த்த சந்திரகலா கோவத்தில் கொந்தளித்தார். வசுந்தராவுக்கும் இந்த நிச்சயத்தில் துளி கூட விருப்பம் இல்லாமல் நின்றார். சரஸ்வதி என்னதான் வசுந்தராவிடம் பேச முயற்சி செய்தாலும் அவருக்கு சரஸ்வதி இடம் பேசவே விருப்பம் இல்லை. இதை பெரிதாக்க வேண்டும் என்று சந்திரகலா நினைத்து திட்டம் போட்டார். அதற்கு ஏர்ப்பது போல் தமிழ் சரஸ்வதி இடம் நல்லவர் போல் பேசினார். என் மகன் திருமணத்தை திட்டம் போட்டு நிறுத்தி விட்டீர்கள் என்று கூறினார். அதற்கு தமிழ் மற்றும் சரஸ்வதி இதுதான் ஆண்டவன் போட்ட திட்டம் என்றார். அப்போது சந்திரகலா வேண்டும் என்றே வசுந்தரா கேட்கும்படி பேசினார். தான் இந்த குடும்பத்தில் சம்பந்தம் செய்ய வேண்டும் என்று நினைத்ததை நிறுத்திவிட்டீர்கள் என்று கூறினார். அதற்கு தமிழும் சரஸ்வதியும் ஆமாம் உங்கள் குடும்பத்தில் இரண்டு சம்பந்தம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறினார். இதை கேட்ட வசுந்தரா அதிர்ச்சி அடைந்தார். அப்போது இத்தனை நாளாக சரஸ்வதி தன்னிடம் நல்லவள் போல் நடித்தார் என்பது போல் நினைத்தார். அதை மேலும் சந்திரகலா பெரிது படுத்தினார். வசுந்தரா மற்றும் கார்த்திக் இருவரும் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….