தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டுக்கு போகும் வழியில் கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்துவிட்டு போகலாம் என்று நினைத்தார். கோவிலுக்கு சந்திரகலா மற்றும் கீதா இருவரும் வர விருப்பம் இல்லாமல் வந்தார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும் கோதை, சரஸ்வதியை இங்கு பார்த்தேன், என்ன செய்தார் சரஸ்வதியை எப்படி அறிமுகம் ஆனார்கள், எப்படி கடவுள் மருமகளாக இவள் தான் வரவேண்டும் என்று முடிவு எடுத்து அனைத்தையும் சொல்லி பெருமிதம் கொண்டார். ஆனால் இதை கேட்க சந்திரகலாவுக்கு எரிச்சலாக இருந்தது. வேறு வழி இன்றி கேட்டுக்கொண்டு இருந்தார். ஆனால் தமிழுக்கு மன உருத்தலாகவே இருந்தது. பொய் சொல்லி இந்த திருமணத்தை நடத்த வேண்டுமா என்று யோசித்தார். பின் வீட்டுக்கு வந்ததும் சந்திரகலா மீண்டும் சரஸ்வதி வீட்டை மட்டம் தட்டி பேசினார். பொண்ணுக்கு நகை போட கூட யோசிக்கும் வீட்டில் போய் சம்பந்தம் செய்வது தனக்கு பிடிக்கவில்லை என்பது போல் பேசினார். அதை கேட்ட தமிழ் கோபம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…