தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் மனதை மாற்ற சந்திரகலா அவரை சமாதானம் செய்வது போல் பேசி அவரை தமிழுக்கு எதிராக மாற்ற முயற்சித்தார். கோதை எப்படி பாரபட்சம் பார்க்கிறார் என்று கோதை மீதும் தவறு இருப்பது போல் பேசினார். தமிழ் படிக்காத சாதாரண ஒரு தொழிலாளி. ஆனால் நீங்கள் அப்படி இல்லை M.B.A படித்து இந்த கம்பேனியை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கத்துக்கொண்டு வந்தவர். அது எப்படி தமிழ் சொல்லி தான் இந்த கம்பேனியே நடப்பது போல் கோதை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார். தமிழ் அந்த தொழிலாளர்களை தன் கையில் போட்டு இந்த நிருவாகத்தில் தன் பக்கம் இழுக்க நினைப்பதாக கூறினார். கார்த்திக் அதை முழுமையாக நம்ப ஆரம்பித்தார். அடுத்த நாள் தமிழ் வீட்டு சாப்பாட்டை சாப்பிடாமல் கேன்டீனில் சாப்பிடும் விஷயம் கோதைக்கு தெரிய வந்தது. அதனால் இனி தமிழுக்கு சாப்பாடு வீட்டில் இருந்து செல்ல வேண்டாம் என்று கூறினார். அதற்கு சரஸ்வதி இனி தானே சாப்பாடு கொண்டு போக கேட்டுக்கொண்டார். கோதை அதற்கு வார்கள் விருப்பம் என கூற தமிழுக்கு சாப்பாடு சரஸ்வதி எடுத்து சென்றார். சென்ற இடத்தில் கால் தவறி M.D இருக்கையில் சரஸ்வதி தெரியாமல் விழுந்துவிட்டார். இதை பார்த்த கார்த்திக் சரஸ்வதி வேண்டும் என்றே இதை செய்ததாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….