தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அபிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவள் அக்காவுக்கு இருதய நோய் வந்து விட்டதாக கூறினார்கள். உடனே பதட்டம் அடைந்த அபி அழுது புலம்பினார். வீட்டில் அனைவருமே பதரினார்கள். உடனே கோதை அவரை சமாதானம் செய்து, வீட்டுக்கு கிளம்ப சொன்னார். கார் புக் செய்யும்படி கூறினார். ஆனால் சரஸ்வதி காரில் வேண்டாம் நானே ஆட்டோவில் கூட்டி செல்கிறேன் என்று கூறினார். அதற்கும் வீட்டில் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். சற்று நேரத்தில் ஆட்டோ எரும் இடம் வந்தது. அங்கு நம்ச்சியும் வந்தார். பின் சரஸ்வதியின் பாட்டியும் அங்கு வந்து இருந்தார். உடனே அபியை மின்னல் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். இது வெறும் நாடகம் தான். உன் அக்காவுக்கு ஒன்றும் இல்லை, சரஸ்வதியையும் தமிழையும் வீட்டில் ஏற்றுக்கொள்ள போட்ட திட்டம் என்று கூறினார்கள். அபி அதை கேட்டு கோவம் கொண்டார். என்னால் அம்மாவுக்கு துரோகம் நினைக்க முடியாது என்று கிளம்பினார். பின் எல்லாரும் பேசி புரியவைத்து அவரையும் இந்த திட்டத்தில் சேர்த்தார்கள். பின் அபியும் ஒத்துக்கொண்டார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். பின் சரஸ்வதி வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் அபி இல்லை என்றால் யார் சமைப்பது என்று நடேசன் கேட்க, உடனே சரஸ்வதி நானே சமைக்கிரேன் என்றார். ஆனால் கோதை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…