தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் தனக்கு சாப்பாடு செய்யவில்லை என்று தெரிய வந்தது. உடனே தான் saraswthy வீட்டில் சாப்பிட்டு வந்தது போல் பொய் சொல்லி சமாளித்தார். ஆனால் அவர் பொய் சொல்கிறார். இன்னும் சாப்பிடவில்லை என்று கோதை கவனித்து அவருக்கு தோசை ஊத்தி கொடுக்க அபியிடம் கூறினார். மேலும் இந்த கோவதொடு அவரது அறைக்கு செல்லும்போது சரஸ்வதி ஃபோனில் அழைத்தார். அதிலும் தமிழ் கோவமாக பேசினார். சரஸ்வதி எதோ செய்ய கூடாத தவறை செய்தது போல் பேசினார் தமிழ். சரஸ்வதியும் தான் எந்த தவரும் பண்ணவில்லை என்று கூறினார். அப்போது அவரும் சாப்பிடவில்லை என்றார். அதனால் இருவருமே வீடியோ காலில் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். மேலும் அடுத்த நாள் காலையில் அருகம்புல் சாறு குடிக்க யாரும் ஏற்பாடு செய்ய வில்லை. அதனால் கோதை கோவத்தில் கொந்தளித்தார். சரஸ்வதி இல்லாததால் அந்த அருகம்புல் ஜூஸ் போட கூட ஆள் இல்லாமல் தவித்தார்கள். வசுந்தரா சரஸ்வதி இல்லாததை மறந்து எப்போதும் போல் தாமதமாக எழுந்து வந்தார். இதனால் வீட்டில் ஒரு பெரிய பிரளயம் வெடித்தது. இதை பார்த்த தமிழ் சரஸ்வதி இல்லாமல் இந்த வீட்டில் எந்த வேலையும் நடக்காது என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…